13 நவ 2009, வெள்ளிக்கிழமை
கோவை பீளமேடு அவினாசி ரோடு - பயனீர் மில் ரோடு சந்திப்பில் நான் கண்ட காட்சி. நேரம் மாலை சுமார் 4 மணி. அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் வகுப்புகள் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அந்த சந்திப்பில் போக்குவரத்தை ஒரு பெண் காவலர் (கான்ஸ்டபிள்) மிக கவனத்துடனும் பொறுப்புடனும் ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தார். உற்சாகமாக துள்ளி குதித்து செல்லும் குழந்தைகளை கண்டிப்புடன் ஒழுங்கு செய்ததுடன், வாகனங்களையும் நல்ல முறையில் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார்.
அப்போது, சில வாகன ஓட்டிகள் மிக வேகமாக ஒட்டியதை தட்டிக்கேட்டார். அந்த வாகனங்கள் வந்த வேகத்தை பார்த்த போது நானும் பதறித்தான் போனேன். குழந்தைகள் வருவதை / இருப்பதை பார்த்தும் வேகத்தை குறைக்காமல், சொல்லப்போனால் இன்னும் வேகத்தை கூட்டி சென்றனர். அதுவும் அடுத்த சந்திப்பில் வேறு பள்ளி குழந்தைகள் இருப்பதயும் பார்த்து! குறிப்பாக, லாரி, வேன், தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் மிக அஜாக்கிரதையாக சென்றன.
அந்த வாகன ஒட்டிகளை அந்த பெண் காவலர் கடுமையாக கண்டித்தும், பலர் பொருட்படுத்தாமலேயே சென்றனர் - அவர் பெண் என்பதாலோ அல்லது சாதாரண காவலர் தான் என்பதாலோ - சிலர் நேருக்குநேர் ஏளனம் செய்து சென்றனர்.
அவருக்கு அது எரிச்சல் கூட்டியபோதும், தன் கடமையை சரியாகவே செய்து கொண்டிருந்தார்.
இதை பார்த்து எனக்கு தோன்றுவது இது தான் - ஒரு வேளை அவர் சினிமா ஹீரோயிசத்துடன் அவர்களை அடித்து உதைத்திருந்தால் எல்லாம் சரியாகியிருக்குமோ? அல்லது அவரோ மற்ற பொறுப்பான காவலர்களோ உண்மையில் அப்படி செய்யத்தான் முடியுமா?
நான் பல வருடங்களாக இதே போன்ற காட்சிகளை இந்த பகுதியில் பார்க்கிறேன். விபத்துகள் பல நடந்தும், ஓட்டுநர்கள் திருந்தியபாடில்லை.
சாலை விதிகளை மீறும் இது போன்றவர்களுக்கு என்ன தண்டனை தரலாம்? லைசன்ஸ் ரத்து செய்தாலோ, அபராதம் விதித்தாலோ, சிறையிலடைத்தாலோ போதுமா? இல்லை சில மத்திய ஆசிய நாடுகளில் உள்ளதாக கேள்விப்படுகிறோமே - Corporal Punishment - அது போன்று மாறு கால் மாறு கை வெட்டி வீசிவிடுவோமா?
Subscribe to:
Post Comments (Atom)

Hi Chander,
ReplyDeleteThe irony is the same day, I saw a constable on duty (here again a lady constable)near the women polytechnic signal, standing at one side of the road and talking on her mobile without caring about the traffic violations that were happening.
-Prakash
Hi Chandra,
ReplyDeleteEvery one should aware of public safety. This saves themselves and others.
Freindly,
Senthil - Certo
சந்துரூ,
ReplyDeleteநம் ஆற்றாமையை இப்படி எழுதித்தான் தீர்த்துக்கலாம். யாரும் புரிஞ்சிக்கிற மாதிரி தெரியலை.
(விரக்தியா சொல்வதா நினைக்கவேண்டாம்)
@ காசி - Kasi Arumugam
ReplyDeleteஉண்மை தான் சார் - குறைந்த பட்சம் அதுவாவது முடிகிறதே!
இன்னொன்று - நாம் ஓட்டும் போது எப்படி போக வேண்டும் என்பதும் நமக்கு புரிகிறதே!
சாலை விதி மீறல்கள் என்பது தினம் தினம் நான் கவலைப்படும் விஷயம். அதே மாதிரி அரசாங்கமும் கவலைப்பட்டு கடுமையான விதிகளை அமுல்படுத்துமாயின் நான் நிச்சயம் பின்பற்றத் தயாராக இருக்கிறேன். ஆனால் மக்களை ப்ரீ-கேஜியிலிருந்து ஆரம்பித்து சொல்லிக் கொடுத்து தயாராக்கவேண்டுமென்பதால் இப்போது நடைமுறைப்படுத்தினால் அடுத்த 20 ஆண்டுகளில் ஒழுங்காகிவிடும். பூனையும் இருக்கிறது. மணியும் இருக்கிறது. கட்டுவதற்குத்தான் ஆளில்லை.
ReplyDelete@சித்ரன்
ReplyDeleteபூனைகளும் மணிகளும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒவ்வொருவராக அவரவருக்கு முடிந்த பூனைகளுக்கு மணி கட்டி விடலாம்....
@super guy:
ReplyDeleteYou are right - more than 100%